search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூய்மை பணி"

    • கடற்கரையில் கிடந்த பிளாஸ்டிக்குகள் எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.
    • பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள் பொதுமக்களிடம் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மனோரா சுற்றுலா தல கடற்கரையில் படகு நிறுத்தும் இடத்தில் சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் கடற்கரையில் கிடந்த நெகிழிப் பைகள், ஒரு முறை பயன்படுத்தப்பட்டு தூக்கி வீசப்பட்ட கப்புகள், மணலில் புதைந்து கிடக்கும் பொருட்களை கண்டுபிடித்து எடுத்து அப்புறப்படுத்தி தூய்மை பணி மேற்கொண்டனர்.

    முன்னதாக காரைக்குடி 9 வது பட்டாலியன் மகேஷ் நீர்நிலைகளை பாதுகாப்பது எப்படி என்பது குறித்து மாணவர்களிடம் விளக்கி கூறினார். பேராவூரணி தேசிய மாணவர் படை அலுவலர் சத்தியநாதன் மாணவர்களை வழிநடத்தினார்.

    நிகழ்ச்சியில் சேதுபாவாசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார், சரபேந்திரராஜன்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் ஜலீலா ஜின்னா, துணை தலைவர் மாசிலாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
    • தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதாக கூறினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர் சிறப்பு முகாம் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். வக்கீல் சங்க செயலாளர் திலீப் வரவேற்பு உரையாற்றினார். நகராட்சி ஆணையர் இளவரசன்,வக்கீல் வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சார்பு நீதிமன்ற நீதிபதி ஸ்ரீராம், மாவட்ட முதன்மை உரிமைகள் நீதிபதி விக்னேஷ் பிரபு ஆகியோர் துப்புரவு முகாமை தொடக்கி வைத்தனர்.

    நீதிபதிகள் ஸ்ரீராம், விக்னேஷ் பிரபு ஆகியோர் மூத்த பெண் தூய்மை பணியாளர் உமாபதி என்பவரை அமர வைத்து அவருடைய கால்களை கழுவி பொட்டு வைத்து பாத பூஜை செய்து தூய்மைக்கு முழு காரணமாக உள்ள உங்களை போன்ற தூய்மை பணியாளர்களுக்கு நன்றி செலுத்துவதாக கூறினர். முன்னதாக தூய்மை பணியின் அவசியம் குறித்து உறுதிமொழி அனைவரும் ஏற்றுக் கொண்டினர். முகாமில் அரசு வக்கீல்கள் வெங்கடேசன், இளமுருகன், ஜான்சி ராணி மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

    • அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார்
    • பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் எடுத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது

    நாகர்கோவில் :

    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் சன்னதி தெரு பாபநாச தீர்த்த குளம் பல ஆண்டுகளாக சுத்தம் செய்யப்படாமல் குப்பை, செடி, மரம் வளர்ந்து பராமரிப்பின்றி காட்சி அளித்து வந்தது. இந்த தீர்த்த குளம் தூய்மை செய்யும் பணிகள் கடந்த சில நாட்கள் முன்பு தொடங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

    தற்போது தீர்த்த குளம் நீரை மோட்டார் வைத்து எடுத்து வெளியேற்றி பிளாஸ்டிக் பைகள், பாட்டில்கள் எடுத்து அப்புறப்படுத்தும் பணி நடந்தது. இப்பணிகளை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன் பார்வையிட்டார். மேலும் அந்த பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

    மகாதேவர் அய்யர் குழுவினர் உழவார பணிகளை செய்து வருகின்றனர். அப்போது கோவில் மேலாளர் ஆனந்த், கணக்காளர் கண்ணதாசன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.

    • பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார்.
    • மாவட்டம் முழுவதும் மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் துாய்மைபடுத்தப்பட்டன.

    ஊட்டி,

    காந்திஜெயந்தியை முன்னிட்டு நீலகிரி சேவா கேந்திரம் சார்பில் தூய்மைப்படுத்தும் பணி நடந்தது. மாவட்டம் முழுவதும் 45 இடங்களில் இந்த பணி நடந்தது.

    பந்தலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவர் சுந்தரம் தலைமை தாங்கினார். கூடலூர் எம்.எல்.ஏ., ஜெயசீலன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் கோவில் வளாகங்கள், குளங்கள், மருத்துவமனைகள், கிராமப்புற சாலைகள் மற்றும் கழிவுநீர் கால்வாய்கள், பள்ளி வளாகங்கள் துாய்மைபடுத்தப்பட்டன.

    அந்தந்த பகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இந்த மக்கள் பணியில் ஈடுபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோட்ட பொறுப்பாளர் மனோஜ் குமார், மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமையிலான நிர்வாகிகள் செய்திருந்தனர்.  

    • தேசிய மாணவர் படை மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்களுக்கு, மாணவர்கள் விழிப்புணர்வு உரையாற்றினர்.

    சங்கரன்கோவில்:

    மேலநீலிதநல்லூர் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரி தேசிய மாணவர் படை பெண்கள் பிரிவை சேர்ந்த மாணவிகள் கல்லூரி வளாகத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டனர். கல்லூரி முதல்வர் ஹரிகெங்காராம் முன்னிலையிலும், தேசிய மாணவர் படை உதவி அதிகாரி அம்பிகா தேவி, ஒருங்கிணைப்பிலும் தூய்மைபணி நடைபெற்றது. மேலும், தேசிய மாணவர் படை மாணவர்கள் குருக்கள்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சென்று அங்குள்ள மருத்துவர் மற்றும் அலுவலர்களுடன் உரையாடி, வந்திருந்த பொது மக்களுக்கு விழிப்புணர்வு உரையாற்றினர். அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் கொடுத்து தூய்மை இந்தியா இயக்கம்- சமூக சேவையை திறம்பட நடத்தினர்.

    • தெப்பக்குளம் பகுதிகளில் இருந்த குப்பைகள் அகற்றப்பட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது.
    • தூய்மை பணியில் மாவட்ட தலைவர் ராஜேஷ் ராஜா உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

    தென்காசி:

    தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி சார்பில் தென்காசி காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றி புதிய மரக்கன்றுகளை நட்டு தூய்மை பாரத நிகழ்ச்சி நடைபெற்றது.

    தென்காசி நகர பாரதீய ஜனதா கட்சி தலைவர் மந்திரமூர்த்தி தலைமையில் தென்காசி மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் ராஜேஷ் ராஜா முன்னிலையில் மாவட்ட பொதுச் செயலாளர் ராமநாதன் சுற்றுச்சூழல் பிரிவு மாவட்ட தலைவர் ராஜ குலசேகர பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவர்கள் முத்துக்குமார், முத்துலட்சுமி, நகர்மன்ற உறுப்பினர்கள் சங்கர சுப்பிரமணியன், லட்சுமண பெருமாள், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட தலைவர் கருப்பசாமி, ஊடகப்பிரிவு மாவட்டத் தலைவர் செந்தூர் பாண்டியன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் ராஜ்குமார், இளைஞரணி மாவட்டத் துணைத் தலைவர் விவேக்குமார், இளைஞர் அணி நகர தலைவர் வைரம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், நகர பொதுச்செயலாளர் யோகா சேகர், நகர பொருளாளர் நாகராஜ், நகர துணைத் தலைவர் மாரியப்பன், நகரச் செயலாளர் விஸ்வநாதன், நகரத் துணைத் தலைவி மகேஸ்வரி, சமூக ஆர்வலர் நவநீத கிருஷ்ணராஜா, ராணுவ பிரிவு மாவட்ட துணை தலைவர் சுரேஷ், நகர தலைவர் கண்ணபிரான், ராணுவ பிரிவு லட்சுமணன் அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் கணபதி, கிளைத் தலைவர் ஆனந்த கிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது.

    செங்கோட்டை:

    செங்கோட்டை எஸ்.எம்.எஸ்.எஸ். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு ஒருங்கிணைந்த கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி மகாத்மா காந்தி பிறந்த நாள் மற்றும் காமராஜா் நினைவு தினத்தை முன்னிட்டு காந்தியின் தூய்மை இந்தியா கனவை நனவாக்கும் விதமாக தூய்மைக்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரகுமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ஜோதிலட்சுமி முன்னிலை வகித்தார். ஆசிரியா் சுடர்மணி வரவேற்று பேசினார்.

    அதனைதொடா்ந்து வளாகத் தூய்மை, கட்டிடங்கள் பராமரித்தல், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட 10 வகையான தூய்மை பணிகள் நடந்தது. மேலும் மகாத்மா காந்தியின் கனவான தூய்மை இந்தியா திட்டத்திற்கு வலுசேர்க்கும் விதமாக உடல் தூய்மை, வீடு, கழிவறை, பூங்கா, சுற்றுப்புறம் ஆகிய இடங்களில் தூய்மையைப் பேணிக் காப்பதற்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். பொருளியல் முதுகலை ஆசிரியர் குமார் நன்றி கூறினார்.

    • தருமபுரி ஒருங்கிணைந்த வளாகத்தில் தூய்மை பணி நடைபெற்றது.
    • முதன்மை மாவட்ட நீதிபதி தொடங்கி வைத்தார்.

    நாடு முழுவதும் ஸ்வச் பாரத் தூய்மை இந்தியா இயக்கம் மகாத்மா காந்தியடிகளின் கனவை நிறைவேற்றும் வகையில் தூய்மையான மற்றும் சுகாதாரமான நாட்டை உருவாக்குவது லட்சியம் என்று பாரத பிரதமர் தொடங்கப்பட்டு தற்போது மக்களிடையே மக்கள் இயக்கம் மாறியுள்ளது.

    நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டு வரும் தூய்மை இயக்கம் சார்ந்த திட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திலும் இன்று தூய்மை இயக்க பணிகள் நடைபெற்றன.

    அதன்படி தடங்கம் பகுதியில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி நீதிமன்ற வளாகத்தில் தூய்மை பணியினை தொடங்கி வைத்து நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணியாளர்களுடன் இணைந்து நீதிமன்ற வளாகம் முழுவதும் தூய்மை பணிகளை மேற்கொண்டார்.

    அதன் தொடர்ச்சியாக நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளையும் நட்டு வைத்தார். இந்தத் தூய்மை இயக்கத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • கருமத்தம்பட்டி அருகே கிட்டாம்பாளையத்தில் நடைபெற்றது.
    • பாதுகாப்பு படை சீப் கமாண்டர் உட்பட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    கருமத்தம்பட்டி,

    காந்தி ஜெயந்தியைெயாட்டி, நேற்று நாடு முழுவதும் ஒரு மணி நேரம் தூய்மை பணி நடந்தது.

    அதன்படி கருமத்தம்பட்டி அருகே உள்ள கிட்டாம்பாளையம் கிராமத்தில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் தூய்மை பணிகள் நடைபெற்றது.

    இதில் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் மற்றும் வீரர்கள் கிராம மக்களுடன் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    முன்னதாக எல்லை பாதுகாப்பு படையினர் 5 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு நடந்து சென்று வழி நெடுகிலும் உள்ள முட்புதர்கள் மற்றும் காகிதங்கள் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து குப்பைத் தொட்டிகளில் போட்டு குப்பைகளை அகற்றினர்.

    மேலும் பொதுமக்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்த தூய்மை இயக்க பணியில் எல்லை பாதுகாப்பு படை சீப் கமாண்டர் கமல் கஹல்பி, டெப்டி கமெண்ட் ராத்தூர் விஷால் சர்மா, கிட்டாம்பாளையம் ஊராட்சி தலைவர் வி.எம்.சி மனோகர் பொதுமக்கள் என 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

    • முகாமிற்கு பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.
    • வாறுகாலில் உள்ள சாக்கடைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் பேரூராட்சியில் தீவிர தூய்மை பணி முகாம் நடைபெற்றது. இதில் பேரூராட்சி தலைவர் சுதா மோகன்லால் தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார்.

    இதில் பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டு ஆலங்குளம் தாலுகா அலுவலக வளாகம், அதனை சுற்றியுள்ள மாறுகால் போன்ற பகுதிகளில் தேங்கி கிடந்த குப்பைகள் மற்றும் வாறுகாலில் உள்ள சாக்கடைகளை அகற்றி சுத்தம் செய்தனர். நிகழ்ச்சியில் இளநிலை உதவியாளர் ராஜசேகரன், வரி வசூலர் திருமலை வடிவம்மாள், 10-வது வார்டு கவுன்சிலர் சுந்தரம், முன்னாள் கவுன்சிலர்கள் ராஜதுரை, மோகன்லால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.
    • தூய்மை பணியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    சரவணம்பட்டி:

    பிரதமரின் தூய்மை பாரத திட்டத்தின் கீழ் இன்று நாடு முழுவதும் பா.ஜ.கவினர் மற்றும் பொதுமக்கள் ஒரு மணி நேரம் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

    கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே அக்ரஹார சாமக்குளம் ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சியில் 165 ஏக்கர் பரப்பளவிலான குளம் ஒன்று உள்ளது. இந்த குளம் அத்திக்கடவு-அவினாசி திட்டத்தில் தேர்வாகி உள்ளது.

    இதையடுத்து இந்த குளத்தில் உள்ள செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்ய பா.ஜ.கவினர் முடிவு செய்தனர். அதன்படி இன்று தூய்மை பாரத திட்டத்தின் கீழ் கோவை மாவட்ட பா.ஜ.கவினர் தூய்மை பணி மேற்கொண்டனர்.

    இந்த தூய்மை பணியில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஒரு மணி நேரம் குளத்தில் உள்ள செடி, கொடிகளை கட்சியினருடன் சேர்ந்து அகற்றும் பணியில் ஈடுபட்டார். பின்னர், அங்கு மரக்கன்றுகளையும் நடவு செய்தார்.

    முன்னதாக அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    அக்டோபர் 2-ந் தேதி காந்திஜெயந்தியை முன்னிட்டும், காந்திக்கு மரியாதை செலுத்தும் விதமாக அக்டோபர் 1-ந் தேதி நாட்டு மக்கள் அனைவரும் ஒரு மணி நேரம் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தினார்.

    அதன்படி இன்று கோவையில் நான் கட்சி தொண்டர்களுடன் சேர்ந்து குளத்தை தூய்மைப்படுத்தும் பணியை மேற்கொண்டேன். இதே போன்று அனைவரும் தூய்மை பணி மேற்கொள்ள வேண்டும்.

    நீங்கள் தூய்மை செய்வதை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். இதன் மூலம் விளம்பரம் தேடுவதாக நினைத்து கொள்ள வேண்டாம். மற்றவர்களுக்கும் இதுபோன்று தூய்மை பணியில் ஈடுபட உந்துதலை ஏற்படுத்த வேண்டும்.

    தூய்மை பணியை முடித்த பின்னர் அனைவரும் தங்கள் பகுதிகளில் இருக்கும் கதர் விற்பனை நிலையத்திற்கு சென்று ஏதாவது ஒரு கதர் பொருளை வாங்க வேண்டும்.

    பண்டிகை காலத்தில் நாம் ஏராளமான பொருட்கள் வாங்குவோம். அதில் முடிந்தவரை நமது நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்கள், நமது மாநிலம் மற்றும் அருகே உள்ள ஊர்களில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்பதை எனது வேண்டுகோளாக வைக்கிறேன்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    தொடர்ந்து அண்ணாமலையிடம் நிருபர்கள், இன்றைய டெல்லி பயணம் குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு அவர் இங்கு அரசியல் வேண்டாம் என தவிர்த்துவிட்டு சென்றுவிட்டார். 

    • அரியமான் கடற்கரையில் தூய்மை பணியை முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்றுகளை நட்டார்.
    • பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    மண்டபம்

    ராமநாதபுரம் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பாக கரு ணாநிதி நூற்றாண்டு விழா மற்றும் உலக சுற்றுலா தினத்தை யொட்டி சாத்தக்கோன்வலசை ஊராட்சி அரியமான் கடற் கரையை சுத்தம் செய்யும் பணி நடந்தது. காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. தூய்மை பணியை தொடங்கி வைத்து கடற்கரையில் மரக்கன்று களை நட்டார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் நாகேஸ்வரி வீர பத்திரன், ராமேஸ்வரம் நக ராட்சி தலைவர் நாசர்கான், ராமநாத புரம் நகராட்சி தலைவர் கார்மேகம், துணைத்தலைவர் பிரவீன் தங்கம், மண்டபம் வட்டார வளர்ச்சி அலுவலர் நட ராஜன், மாவட்ட வன அலுவலர் ஹேமலதா, மாவட்ட சுற்றுலா அலுவலர் அருண் பிரசாத், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் உட்பட சுற்றுலாத்துறை அலுவ லர்கள் மற்றும் கிராம பணி யாளர்கள் கலந்து கொண்டனர். தூய்மை பணியில் கல்லூரி மாணவ, மாணவி கள் கலந்து கொண்டு அரியமான் கடற்கரையினை சுத்தம் செய்தனர். பங்கேற்ற மாணவ, மாணவி களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    ×